வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 67. வினைத்திட்பம்

 


வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.- 661

செயல் சிறந்து விளங்குவது மன உறுதியாலேதான்

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். - 662

வருமுன் காத்தல், வந்தபின் தளராமை சிறந்தோர் கொள்கை

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமந் தரும்.- 663

செயலைத் தடைபடாமல் முடிக்கும் மனவுறுதியே வினைத்திட்பம்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல். - 664

சொல்லுவது யார்க்கும் எளிது, சொல்லியபடி செய்துமுடிப்பதே அரிது

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும்.- 665

செயலிற் சிறந்தோரை அரசரும் மதித்துப் போற்றுவார்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.- 666

மனவுறுதி இருந்தால் நினைத்தது நிறைவேறும்

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து. - 667

உருவத்தைப் பார்த்து யாரையும் குறைத்து மதிக்காதே,

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல்.- 668

மனந்தெளிந்து, தடுமாறாமல், தாமத்திக்காமல் செயலாற்றுக

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை. - 669

துன்பம் வந்தாலும் நல்லதைத் துணிவுடன், இன்பமுடன் செய்க

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.- 670

எத்தகு வலியவராயினும், செயல் உறுதியின்றிப்  போற்றப்படார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக