வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 12 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 61. மடியின்மை

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும். - 601

சோம்பல் குடிப்பெருமையைக் கெடுத்துவிடும்                           

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.- 602

குடியை உயர்த்த சோம்பலை நீக்குவதே வழி                         

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து. - 603

சோம்பேறியின் குடும்பம் விரைந்து அழியும்                        

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றி லவர்க்கு.- 604

குடியைக் கெடுத்து, குற்றத்தைப் பெருக்குவது 

சோம்பலே             

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.- 605

தாமதம், மறதி, சோம்பல், தூக்கம் நான்கும் கெடுவோரியல்புகள்

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.- 606

அதிகாரமுடையவர் அருகிலிருந்தாலும் சோம்பேறிகள் பயனடையார்

இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து

மாண்ட உஞற்றி லவர்.- 607

சோம்பேறிகள், கடுஞ்சொல்லுடன் இகழ்ச்சியடைவர்                  

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.- 608

சோம்பலுடையவர்கள் பகைவர்க்கும் அடிமையாவர்கள்        

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.- 609

தன் பதவிக்கு வரும் கேடு, சுறுசுறுப்பால் நீங்கும்                    

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.- 610 

சோம்பல் இல்லாத அரசனே உலகை ஆள்வான்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக