வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 15 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 64. அமைச்சு


 

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு. - 631

கருவி, காலம், செய்யும் முறை ஆய்ந்து அறிந்தவனே அமைச்சன்     

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு. - 632

மனவுறுதி, காத்தல், கற்றல், கேட்டறிதல், முயற்சியாளன் அமைச்சன்  

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு. - 633

நட்பில் பிரித்தல், சேர்த்தல், காத்தல் நுட்பங்கள் அறிந்தவனே அமைச்சன்

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு.-634

ஆராய்ந்து செய்வோன், கூறுவன தெளிந்து கூறுவோன் அமைச்சன்

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.- 635

அறம், சொல்வன்மை, செயலாற்றும் நுட்பம் அறிந்தவரே துணையாவார்

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்   

யாவுள முன்நிற் பவை.- 636

தன்னறிவுடன், நூலறிவும் கொண்டவருக்குமுன் சூழ்ச்சிகள் நில்லாது    

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல். - 637

செயற்கையை அறிந்தாலும் இயற்கையுடன் ஒத்திரு

அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்.                        638

அரசன் விரும்பாவிடினும் நன்மையை உறுதிபட கூறுபவனே அமைச்சன்

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்.                       639

சுயநலமான மந்திரி எழுபது கோடி எதிகளுக்குச் சமமானவராவார்

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்.                     640

திறனில்லாதவர்களால் திட்டங்களை முழுமையாக முடிக்கமுடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக