வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 16 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் -65. சொல்வன்மை

 


நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.- 641

நாவன்மை பிற வன்மைகளைவிட சிறந்தது

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலான்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.- 642

உயர்வும், தாழ்வும் பேச்சில் உள்ளதை, உணர்ந்து பேசு

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.- 643

கேட்டார் மகிழ, கேட்காதவரும் விரும்ப அமைவதே நல்ல பேச்சு

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனின்ஊங்கு இல்.- 644

அறத்தையும் பொருளையும் விட உயர்வானது திறனறிந்து கூறுதல்

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.- 645

ஒவ்வாரு சொல்லையும் ஒன்றை ஒன்று வெல்வதாகப் பேசு

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள். - 646

இனியன கூறி, பயனறிந்து நல்லவை கேள்

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது. - 647

சொல்வன்மை,சோர்வின்மை,அஞ்சாமை உடையாரை வெல்லலாகாது 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின். - 648

சொல்லுபவர் சொன்னால் இவ்வுலகமே அதனை விரைந்து கேட்கும்

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர். - 649

பேச்சுத் திறனில்லாதவரே அதிகம் பேச விரும்புவர்

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார். - 650

கற்றதைப் பிறர் உணரக் கூறாதவர், மணமில்லா மலர் போன்றவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக