வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடி

செவ்வாய், 6 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 55. செங்கோன்மை

 


ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.                      541

குற்றத்தை ஆராய்ந்து யாரிடமும் நடுநிலையுடன் வழங்குவதே நீதி  

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல் நோக்கி வாழுங் குடி.                      542

மக்கள் மன்னனையும், உயிர்கள் மழையையும் நம்பி வாழும்  

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.                       543

அறவோர் நூலுக்கும், அறத்துக்கும் நல்லாட்சியே அடிப்படையாகும்

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.                    544

மக்களைக் காக்கும் மன்னன் வழியில்  நிற்கும் உலகம்

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு.                  545

நல்லாட்சியில் மழையும், விளைச்சலும் நன்றாக இருக்கும்

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.               546

படையால் கிடைப்பதைவிட நல்லாட்சியால் கிடைப்பதே வெற்றி

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.                 547

நீதி தவறாது ஆட்சி செய்தால் அந்த நீதியே மன்னனைக் காக்கும்

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.                     548

எளிமையும், நீதியும் இல்லாத மன்னன் ஆட்சி தானே அழியும்

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் 

வடுவன்று வேந்தன் தொழில்.                    549

நல்லவர்களைக் காத்து, தீயவரை தண்டித்தலே வேந்தன் கடமை

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.                    550

தீயரை அழித்தல், களை எடுப்பதற்கு சமமானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக