வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 9 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 58. கண்ணோட்டம்

 


கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.-571

உயிர்கள் மீதுகொள்ளும் அன்பால் இவ்வுலகு அழியாது உள்ளது

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.- 572

அன்புடன் இரக்கம்கொள்ளும் கண்ணோட்டம் இல்லதார் பூமிக்கு சுமை

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண். - 573

பாடலுக்கு இசையைப் போன்றது கண்ணிற்க கண்ணோட்டம் 

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண். - 574

அன்பிலார் கண்கள் முகத்தில் தோன்றும்,   வேறுபயனில்லை

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்.-575

கண்ணிற்கு அழகு அன்பு! அது இல்லாதவருக்கு அது புண்

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டியைந்துகண் ணோடா தவர்.- 576

அன்பியைந்த பார்வையில்லாதவர் மண்ணியைந்த மரம் போன்றவா்

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.-577

கண்ணுடையார் என்பார் கண்ணோட்டம் உடையவரே

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு.- 578

கடமைக்கும், அன்புக்கும் இடைவெளி அறிந்தவர் உலகை வெல்வர்

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.- 579

தவறுசெய்தவரிடமும் கண்ணோட்டத்துடன் நடப்பதே தலைசிறந்த பண்பு

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.- 580

கண்முன்னே விசம் கலந்தாலும், நல்ல நாகரிகமுடையவா் உண்பார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக