வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 3 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 52. தெரிந்து வினையாடல்

 


நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.                       511

நன்மையும், தீமையும் ஆராய்ந்து நன்மைக்கே முன்னுரிமை வழங்கு 

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை.                      512

வரவை விரிவாக்கி, வளத்தைப் பெருக்கி இடையூற்றை ஆய்ந்தறி

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தௌiவு.                   513

அன்பு, அறிவு, செயல் , பேராசையில்லாதவனே பதவிக்கு அணி

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.                     514

பல்வேறு நற்குணங்கள் இருந்தாலும் செயலால் வேறுபடுபவர் பலர்

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.                 515

செயல்திறனல்லாதவரிடம் பணி வழங்கக்கூடாது

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தொடு

எய்த உணர்ந்து செயல்.                     516

உரியகாலத்தில் சரியாகச் செய்பவரிடம் வேலையைக் கொடு

இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.                      517

இதனை இவர்தான் முடிப்பார் என ஆய்ந்து வேலையை வழங்கு

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.                       518

நம்பிய ஒருவனுக்கு வழங்கிய பணியில் குறுக்கிடாதே   

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு.                      519

பணிச்சூழல் நட்பை தவறாகப் புரிந்தவரிடம் செல்வம் தங்காது

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு.                       520

நாட்டின் வளம், உழைப்பாளரை அரசன் வாழவைப்பதில் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக