வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 21 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 69. தூது

 


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. - 681

அன்பு, குடி, பண்பில் சிறந்தவனே தூது உரைப்பான் தகுதி 

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

இன்றி யமையாத மூன்று.- 682

அன்பு, அறிவு, ஆய்ந்த சொல்வன்மை தூதுவனுக்குரியன

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.-  683

நல்ல நூலறிவுடையவனே தூது செல்லத் தகுதியானவன்

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு - 684

அறிவு, தோற்றம், கல்வி இம்மூன்றும் தூதுவனுக்குரியன

தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

நன்றி பயப்பதாந் தூது. - 685

தேவையானதை மட்டும் மகிழக் கூறி நன்மை பயப்பது தூது

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்கது அறிவதாம் தூது. - 686

கற்று, அஞ்சாமல், மனதில் பதியுமாறு கூறி குறிப்பறிவான் தூதுவன்

கடனறிந்து காலங் கருதி இடனறிந்கு

எண்ணி உரைப்பான் தலை. - 687

கடமை, காலம், இடமறிந்து செல்வபவனே தூதுவன்

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு. - 688

தூய்மை, துணை, துணிவு இம்மூன்றும் தூதுவனின் இயல்பு

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்

வாய்சேரா வன்க ணவன். -689

தன் அரசன் கருத்தை தடுமாற்றமின்றி சொல்பவன் தூதுவன்

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு

உறுதி பயப்பதாம் தூது.- 690

தான் அழிவதாயினும் தன் அரசனுக்கு உறுதியுடன் நடப்பவன் தூதுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக