வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 2 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 103. குடிசெயல்வகை

 


கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல். - 1021

தன்குடியை உயர்த்துவது போன்ற உயர்ந்தது வேறில்லை

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீன்வினையால் நீளும் குடி. - 1022

முயற்சி, அறிவு என்னும் இரண்டின் துணையால் குடும்பம் உயரும்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.- 1023

குடியை உயர்த்த நினைப்பவருக்குத் தெய்வம் விரைந்து உதவும்    

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்

தாழாது உஞற்று பவர்க்கு. - 1024

குடியை உயர்த்த எண்ணுபவர்க்கு பல செயல்கள் தாமே முடியும்

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு. - 1025

குடிகளைக் காக்கும் குற்றமற்றவனுக்கு சுற்றம் நிறையும்

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

இல்லாண்மை ஆக்கிக் கொளல். - 1026

தன்குடியை ஆள்வதே நல்லாண்மை எனப்படும்

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை.  - 1027

போர்க்களத்து வீரர்போல், குடி உயர உழைப்பவர்க்கே பொறுப்பு வரும்

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும். - 1028

குடிகளை எல்லாக் காலமும் காக்க வேண்டும்

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்

குற்றம் மறைப்பான் உடம்பு. - 1029

குடும்பத்தின் துன்பத்தைத் தாங்குபவன், துன்பத்திற்கே பாத்திரமாவான்

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்  

நல்லாள் இலாத குடி. - 1030

துன்பத்தைத் தாங்குவோர் இல்லாத குடி அழிந்துவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக