வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 4 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 105 நல்குரவு

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது. - 1041

இல்லாமையின் கொடியது எதுவென்றால், இல்லாமையே கொடியது  

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும். -1042

இல்லாமை என்ற பாவியால் இக்காலமும் எக்காலமும் துன்பமே     

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குரவு என்னும் நசை.- 1043

வறுமையில் எழும் பேராசை , குடிச்சிறப்பையும், புகழையும் அழிக்கும்

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொற்பிறக்கும் சோர்வு தரும்.- 1044

நற்குடியில் பிறந்தவரையும், இல்லாமை என்னும் துன்பம் வந்து சேரும்

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும். -1045

வறுமை வந்தால் பல துன்பங்கள் தானே வரும்               

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும். - 1046

நன்கு உணர்ந்து சொன்னாலும் வறியவர் பேச்சை உலகு கேட்காது

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும். -1047

தவறான வழியில் வறுமையடைந்வனைத்  தாயும் மதிப்பதில்லை

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு. -1048

கொல்லுதல் போன்ற வறுமை இன்றும் வருமோ?                       

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது. -1049

நெருப்பில் தூங்கினாலும், வறுமையில் துங்கமுடியாது        

துப்பர வில்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று. - 1050

வறியவர் துறவியாதலே சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக